தேவதூதர்கள் நீங்கள்… அம்பானி குடும்பத்திற்கு நன்றி சொன்ன ரிஷி கபூர் மனைவி!!

பாலிவுட் நடிகரான ரிஷி கபூர், இயக்குனராகவும், பட தயாரிப்பாளராகவும் பாலிவுட்டில் பல ஆண்டுகளாக வலம் வந்தவர். ஏறக்குறைய 100 படங்கள் நடித்த இவருக்கு 2018 ஆம் ஆண்டு கேன்சர் ஏற்பட்டது. இதனால், வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று பூரண குணமடைந்த பின்னர் இந்தியா வந்தடைந்தார். இந்தநிலையில், கடந்தவாரம் ரிஷி கபூருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட, அவர் மும்பையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றார், ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மனைவி நீது
 
தேவதூதர்கள் நீங்கள்… அம்பானி குடும்பத்திற்கு நன்றி சொன்ன ரிஷி கபூர் மனைவி!!

பாலிவுட் நடிகரான ரிஷி கபூர், இயக்குனராகவும், பட தயாரிப்பாளராகவும் பாலிவுட்டில் பல ஆண்டுகளாக வலம் வந்தவர்.

ஏறக்குறைய 100 படங்கள் நடித்த  இவருக்கு 2018 ஆம் ஆண்டு கேன்சர் ஏற்பட்டது. இதனால், வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று பூரண குணமடைந்த பின்னர் இந்தியா வந்தடைந்தார்.  

இந்தநிலையில், கடந்தவாரம் ரிஷி கபூருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட, அவர் மும்பையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றார், ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தேவதூதர்கள் நீங்கள்… அம்பானி குடும்பத்திற்கு நன்றி சொன்ன ரிஷி கபூர் மனைவி!!

அவரது மனைவி நீது கபூர் ரிஷி கபூரின் சிகிச்சையின் போது, பெரிய அளவில் ஆதரவு கொடுத்தமைக்காக முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கு ரிஷி கபூரின் மனைவி நீது இன்ஸ்டாகிராமில் நன்றி தெரிவிக்கும் விதமாக, உருக்கமான பதிவினை பதிவிட்டுள்ளார்.

அவர் பதிவில், “கடந்த இரண்டு ஆண்டுகள் ரிஷி கபூருக்கு தொடர் சிகிச்சைகள் அளித்து வந்தோம், இந்த மோசமான கால கட்டங்களில் அம்பானி குடும்பத்தினர் அளவிட முடியாத அன்பும், ஆதரவும் கொடுத்தனர்.

ரிஷி கபூரை அடிக்கடி சந்தித்து தைரியம் கொடுப்பது, பயப்படும்போது எங்கள் கையைப் பிடித்து ஆறுதல் கூறுவது என சொல்லிக் கொண்டே போகலாம்.

முகேஷ் பாய், நிதா பாபி, ஆகாஷ், ஸ்லோகா, அனந்த் மற்றும் இஷா ஆகியோருக்கு என் குடும்பத்தினர் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன், நீங்கள் கடவுளால் அனுப்பப்பட்ட தூதர்கள்” என்று கூறியுள்ளார்.

From around the web