தியேட்டருக்கு வாங்க சந்தோஷமா சிரிங்க... ரியோ

"மக்களே உங்கள் எல்லோருடைய ஆசீர்வாதத்தில் ஏப்ரல் 30 அன்று தியேட்டர்களில்  'பிளான் பண்ணி பண்ணனும்' ரிலீசாகிறது. 
 
தியேட்டருக்கு வாங்க சந்தோஷமா சிரிங்க... ரியோ

சிவகார்த்திகேயன் தயாரித்த 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் ரியோ. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து ரியோ, 'பானா காத்தாடி', 'செம போத ஆகாதே' படங்களின் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கும் 'பிளான் பண்ணி பண்ணனும்' படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த படத்தில் ரம்யா நம்பீசன், பால சரவணன், ரோபோ சங்கர், தங்கதுரை, சித்தார்த் விபின், எம்.எஸ் பாஸ்கர், ராம்தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை பாஸிட்டிவ் பிரின்ட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ரியோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறும்போது "மக்களே உங்கள் எல்லோருடைய ஆசீர்வாதத்தில் ஏப்ரல் 30 அன்று தியேட்டர்களில்  'பிளான் பண்ணி பண்ணனும்' ரிலீசாகிறது. தியேட்டருக்கு வாங்க சந்தோஷமா சிரிங்க" என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

From around the web