இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க தடை விதிக்க கோரிக்கை!

இயக்குனர் சங்கருக்கு எதிரான வழக்கில் மேல்முறையீடு செய்ய லைக்கா நிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது!
 
இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க தடை விதிக்க கோரிக்கை!

மக்கள் மத்தியில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரை பெற்று நல்லதொரு இடத்தைப் பிடித்துள்ளார் இயக்குனர் சங்கர். எந்திரன் என்ற திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தில் கதாநாயகனாகசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து இருந்தார். மேலும் அவருக்கு ஜோடியாக உலக அழகி ஐஸ்வர்யாராய் நடித்து இருந்தார். இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்குனர் சங்கர் இயக்கியிருந்த படமும் வெற்றிப்படமாக அமைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

lyca

உலக நாயகன் கமலஹாசனை வைத்து இந்தியன் என்ற திரைப்படத்திலும் இயக்கி மிகப்பெரிய வெற்றிப்படமாக கொடுத்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இளைய தளபதி விஜய்யை வைத்து நண்பன் திரைப்படத்தின் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில் தற்போது இவர் மீது வழக்கு தொடுத்துள்ளது. மேலும் இந்த வழக்கினை லைகா நிறுவனம் கொடுத்துள்ளது அதிர்ச்சி அளித்துள்ளது. இயக்குனர் சங்கர் இந்தியன்2 படத்தை முடித்த பின்னரே வேறு படங்களை இயக்கவும் கோரிக்கை வைத்துள்ளது.

இது தொடர்பாக உயர் நீதிமன்றம் ஆனது தற்போது லைகா நிறுவனத்துக்கு எதிரான வழக்கில் மேல்முறையீடு செய்ய அனுமதி அளித்துள்ளது. மேலும் தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்த லைக்கா நிறுவனத்திற்கு தற்போது அனுமதி கிடைத்துள்ளது. மேலும் நிறுவனம் இயக்குனர் சங்கரை திரைப்படங்களை இயக்க தடை விதிக்க கோரிக்கை வைத்துள்ளது. இந்தியன் 2 படத்துக்கு 150 கோடி பட்ஜெட் ஒதுக்கி நிலையில் தற்போது 236 கோடி செலவு செய்து இருப்பதாக தகவல்,  236 கோடி செலவு செய்தாலும் 80 சதவீத பணிகள் மட்டுமே முடிந்திருப்பதாக மனுவில் லைகா தாக்கல் செய்துள்ளது.

From around the web