"பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண உதவி" -உலகநாயகன் பாராட்டு!

கொரோனா நோயால் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு படிப்பு செலவை ஏற்கும் தமிழக அரசினை பாராட்டினார் உலகநாயகன் கமலஹாசன்!
 
mnm

தற்போது நம் தமிழகத்தில் ஆட்சியில் உள்ளது திராவிட முன்னேற்றக் கழகம். மேலும் முதல்வராக அக்கட்சியின் தலைவரான முகஸ்டாலின் உள்ளார். இந்நிலையில் அவர் ஆட்சியில் பதவி ஏற்கும் போது அவருக்கு சவால் விடும் விதமாக தமிழகத்தில் சூழ்நிலையும் நோய்களும் அதிகமாக இருந்தது. இதனை எல்லாம் கடந்து தற்போது தனது ஆட்சியை திறம்பட செய்து வருகிறார் என்றும் அவருக்கு பாராட்டுக்கள் வந்த வண்ணமாக உள்ளது. தற்போது அவர் பல்வேறு விதமான நிவாரண தொகைகளை மக்களுக்கு கொடுத்து வருகிறார். மேலும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.kamal

இந்த கொரோனா நோயால் பல பெற்றோர்களை இழந்து குழந்தைகள் தவிக்கின்றனர்.மேலும் அவர்களுக்கு உதவி செய்யும் வண்ணமாக தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார் உலகநாயகன் என்றழைக்கப்படுகின்ற கமலஹாசன். மேலும் இவர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராகவும் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு கடும் சவால்களுக்கு பின்னர் இறுதியில் தோல்வியைத் தழுவினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது கோரிக்கையை ஏற்று தமிழக அரசு நடைமுறைப்படுத்த காணப்படுகிறது.

இதன்படி தமிழகத்தில் கொரோனா நோயால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியாக வழங்க ஒப்புதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இதனை வரவேற்கத்தக்க உள்ளதாக உலகநாயகன் கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். மேலும் இத்தகைய குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்று கூறியது பாராட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார் உலகநாயகன் கமலஹாசன்.

From around the web