வெளியானது அசரவைத்த வில்லனின் பாடல்!

கடந்த பொங்கல் அன்று வெளியாகி இன்றளவும் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வருகிற படம் "மாஸ்டர்". இப்படத்தினை "கைதி" படத்தின் இயக்குனரான "லோகேஷ் கனகராஜ்" இயக்கினார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இப்படத்தில் "தளபதி" என்று அழைக்கப்படும் "விஜய் "கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படம் மக்களிடையே நல்லதொரு வரவேற்பை பெற்று இன்றளவும் தியேட்டர்களில் ஓடிக் கொண்டுள்ளது. இப்படத்தில் விஜய்யுடன் "நடிகை மாளவிகா மோகன்" "நடிகை ஆண்ட்ரியா" போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

குறிப்பாக இந்த படத்தில் "கைதி" படத்தின் மூலம் புகழ்பெற்ற "அர்ஜுன் தாஸ் "இவர்களுடன் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் "மக்கள் செல்வன்" என்று அழைக்கப்படும் "நடிகர் விஜய் சேதுபதி" இவர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இதில் நடிகர் விஜய் சேதுபதி "பவானி" என்ற பெயரில் நடித்திருந்தார். நடிகர் விஜய் சேதுபதியின் திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு வில்லனாக தோன்றி அசர வைத்திருப்பார். இத்திரைப்படத்தின் அவரது கதாபாத்திரம் ரசிகர்கள் இடையே மிகுந்த வரவேற்பு பெற்றது.
இத்திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் "அனிருத்" இசையமைத்திருந்தார். அனிருத் இசையில் வெளியான இத்திரைப்படத்தின் "பொலகட்டும் பரபர" என்ற பாடலின் வீடியோ வெளியானது.இப்பாடல் நடிகர் விஜய் சேதுபதியை மையமாக வைத்து உருவாக பாடல் நடிகர் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்திலும், கொண்டாட்டத்திலும் உள்ளனர். இப்பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே வைரலாக பரவி லைக்ஸ் குவிந்து வருகிறது.