வெளியிட்டார் தனது படத்தின் லிரிக்ஸ் வீடியோவை....!

நடிகர் மோகன்லால் தான் நடித்த மரக்கர்: அரபிகடலிண்டே சிம்ஹாம் படத்தின்  லிரிக்ஸ் வீடியோவை வெளியிட்டார்...!
 
நடிகர் மோகன்லால் தனது படத்தின் லிரிக்ஸ்  வீடியோவை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்....

மலையாள சினிமாவின் முன்னணி கதாநாயகனாக விளங்குபவர் நடிகர் மோகன்லால். இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழிலும் உலகநாயகன் கமலஹாசன் நடித்த உன்னைப்போல் ஒருவன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Actor mohanlal

மேலும் இளைய தளபதி என்றும் தளபதி என்றும் அழைக்கப்படும் நடிகர் விஜய்யுடன் ஜில்லா திரைப்படத்தில் நடித்திருந்தார் ஜில்லா திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு அப்பாவாக நடித்து இருந்தார். இவர் நடித்திருந்த கதாபாத்திரம் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. மேலும் தமிழில் இருவர் என்ற திரைப்படத்தில் நடிகர் மோகன்லால் நடித்திருந்தார்.

நடிகர் மோகன்லால்   மரக்கர்: அரபிகடலிண்டே சிம்ஹாம்  என்ற படத்தில் நடித்துள்ள நிலையில் இப்படத்தின் உள்ள ஒரு பாடலின் லிரிக்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார் இந்தப் பாடல் தமிழ், தெலுங்கு ,மலையாளம் ,கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில் வெளியாகியுள்ளது . இத்திரைப்படத்தில் இவருடன் நடிகை கீர்த்தி சுரேஷ் ,நடிகை கல்யாணி பிரியதர்ஷன், நடிகர் பிரபு, நடிகர் அர்ஜுன் மேலும் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

From around the web