விமல்-வரலட்சுமி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 7 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டு இருந்த நிலையில் தற்போது தான் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. தீபாவளி வரை விபிஎப் கட்டணமும் இல்லை என்பதால் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் அறிவிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது 

ஏற்கனவே தீபாவளி தினத்தில் ’களத்தில் சந்திப்போம்’ ’எம்ஜிஆர் மகன்’ மற்றும் ’இருட்டு அறையில் முரட்டு குத்து 2’ ஆகிய திரைப்படங்கள் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது 

kannirasi

இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளி வந்துள்ளது. விமல் வரலட்சுமி நடிப்பில் உருவான ’கன்னி ராசி’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி நவம்பர் 27 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது

விமல் ஜோடியாக வரலட்சுமி நடித்த இந்தப் படத்தில் பாண்டியராஜன், ரோபோ சங்கர், ஷகிலா, யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளன்ர். இந்த படத்தை முத்துக்குமரன் என்பவர் இயக்கியுள்ளார் விஷால் சந்திரசேகர் இசையில் உருவாகி இந்த படம் விமலுக்கு ஒரு திருப்பத்தை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web