ரஜினி நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!!

இந்நிலையில் தற்போது அண்ணாத்த படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. இந்த வருட தீபாவளி (4.11.2021) பண்டிகைக்கு அண்ணாத்த திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினி. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இமான் இசையமைக்கிறார். 

அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இதை தொடர்ந்து டிசம்பர் மாதம் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், நடிகர் ரஜினியின் ரத்த அழுத்தத்தில் பிரச்சனை ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர் சென்னைக்கு திரும்பினார். 

இந்நிலையில் தற்போது அண்ணாத்த படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. இந்த வருட தீபாவளி (4.11.2021) பண்டிகைக்கு அண்ணாத்த திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அண்ணாத்த படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. இந்த வருட தீபாவளி (4.11.2021) பண்டிகைக்கு அண்ணாத்த திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதை தொடர்ந்து, #AnnaattheDeepavali என ரசிகர்கள் ட்விட்டரில் உற்சாகமாக ட்ரெண்ட் அடித்து வருகின்றனர்.  

From around the web