கடற்கரை புகைப்படத்தை வெளியிட்ட அண்ணியார்!!!

சீரியல் நடிகை ரேகா கடற்கரை புகைப்படங்கள் தற்போது வெளியிட்டுள்ளார்.
 
கடற்கரை புகைப்படத்தை வெளியிட்ட அண்ணியார்!!!

சன் டிவியில் தொடர்ந்து 5 ஆண்டுகள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த சீரியல் தெய்வமகள்.

இந்த சீரியல் மூலம் தான் தற்போது வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் நடிகை வாணி போஜன் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

மேலும் இந்த சீரியலில் கதாநாயகி, கதாநாயகனை தவிர்த்து மிகவும் பிரபலமான ஒருவர் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ரேகா தான்.

ஆம் தெய்வமகள் சீரியலில் அண்ணியார் எனும் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் நடிகை ரேகா. இவர் இதன்பின் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நந்தினி சீரியலில் மந்திரவாதி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

நடிகை ரேகாவிற்கு திருமணமாகி ஒரு மகள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சீரியல் நடிகை ரேகா கடற்கரை புகைப்படங்கள் தற்போது வெளியிட்டுள்ளார்.

From around the web