பாலாஜிக்கு ரெட் கார்ட்: இந்த வாரம் இருவர் வெளியேற்றமா?

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் சுரேஷ் சக்கரவர்த்தி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்ற செய்தியை சமூக ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆன்லைன் பார்வையாளர்களின் டுவிட்டுகள் இதை உறுதி செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் சில மணி நேரமாக பாலாஜிக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டதாகவும் இதனையடுத்து அவரும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றபட்டதாகவும் கூறப்படுகிறது 

biggboss

சனம் ஷெட்டியை அவர் அவமரியாதையாக பேசியதால் ஒரு பெண்ணுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்ற காரணத்தைக் காட்டி பிக்பாஸ் அவரை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை 

ஒருவேளை இந்த செய்தி உண்மையாக இருந்தால் இன்று மட்டும் பிக்பாஸ் வீட்டில் இருந்து இரண்டு பேர் வெளியேற்றப்படுகிறார்கள் என்பது குறிப்பிடதக்கது. ஏற்கனவே கடந்த சீசன்களில் சரவணன் உள்பட ஒருசிலர் பெண்களுக்கு மரியாதை கொடுக்காத காரணத்தினால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பாலாஜியும் வெளியேற்றப்படுவாரா? என்பதை இன்றைய நிகழ்ச்சியில்  பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web