சற்றுமுன் வந்த தகவல்: அர்ச்சனா சீக்ரெட் அறைக்கு சென்றாரா?

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நாளை வெளியேறப் போவது ஆஜித் அல்லது அர்ச்சனா என்ற செய்திகள் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இருவருக்கும்தான் குறைவான ஓட்டுகள் கிடைத்துள்ளதாகவும் இன்று கிடைக்கும் மிஸ்டுகால் வாக்குகளின் அடிப்படையில் இருவரில் ஒருவர் வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியானது 

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி அர்ச்சனா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விட்டது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. பிக்பாஸ் வீட்டை பொருத்தவரை மிக்சர் சாப்பிட்டு கொண்டு அமைதியாக இருப்பவர்கள் ஆட்டத்தில் தொடர்வார்கள் என்பதும் ஆர்ப்பாட்டமாக பேசுபவர்கள் ஆட்டத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. சுரேஷ் சக்கரவர்த்தி, சனம், சம்யுக்தா, ஆகியோர் இதற்கு உதாரண போட்டியாளர்களாக இருந்த நிலையில் தற்போது அடுத்ததாக அர்ச்சனா வெளியேறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அர்ச்சனா சீக்ரெட் அறையிலும் இல்லை என்பது குறிப்ப்பிடத்தக்கது 

archana

அன்பு என்ற மந்திரத்தை பயன்படுத்தி மற்ற போட்டியாளர்களை வெளியேற்றி கொண்டிருந்த அர்ச்சனா இன்று வெளியேறியுள்ளார். அவருடைய போலி அன்பு அவருக்கு முடிவாக போய்விட்டது என்பது குறிப்பிடத்தக்கது 

அர்ச்சனா இந்த வாரம் வெளியேறியதை அடுத்து அர்ச்சனாவின் தயவினால் இதுவரை விளையாடிக்கொண்டிருந்த ரியோ, சோம் மற்றும் கேபி இனிமேல் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மேலும் அர்ச்சனா இல்லாததால் பாலாஜி, ஆரி மற்றும் அனிதாவுக்கு கொஞ்சம் வலு அதிகரிக்கும் என்றும் அவர்களுடைய டாமினேஷன் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது. அர்ச்சனா வெளியேறியபின் பிக் பாஸ் வீட்டில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web