எப்பா! ஒருவழியாய் ரிலீசுக்கு ரெடி ஆயிட்டு "நெஞ்சம் மறப்பதில்லை"...!

மார்ச் 5-இல் வெளியாக உள்ளது நெஞ்சம் மறப்பதில்லை என்ற திரைப்படம்....!
 
இயக்குனர் செல்வராகவனின் ட்விட்டர் பக்கம் கூறும் கருத்து....,

நடிகர் தனுஷ் நடித்த "புதுப்பேட்டை" என்ற திரைப்படத்தினை இயக்கி இருந்தார் பிரபல இயக்குனர் "செல்வராகவன்".இவரின் இயக்கத்தில் வெளியாகியிருந்த "காதல் கொண்டேன்" என்ற திரைப்படம் வேற லெவல் ஹிட்டடித்தது. இத்திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடித்து இருந்தார் இத்திரைப்படத்தின் மூலம் நடிகர் தனுஷ் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வந்தார்.

nenjam marappathillai

இவரின் இயக்கத்தில் வெளியாகி இருந்த "ஆயிரத்தில் ஒருவன்" என்ற திரைப்படம் "பிளாக்பஸ்டர் ஹிட்" அடித்து இன்றும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. ஆயிரத்தில் ஒருவன் என்ற திரைப்படத்தில்" நடிகர் கார்த்தி", "நடிகை ஆண்ட்ரியா", "நடிகர் பார்த்திபன்" மற்றும் பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.ஆயிரத்தில் ஒருவன் என்ற திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

தற்போது தனது இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "நெஞ்சம் மறப்பதில்லை" இத்திரைப்படத்தில் நடிகர் "எஸ் .ஜே சூர்யா" நடித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.  தற்பொழுது இயக்குனர் செல்வராகவன் இத்திரைப்படத்தின் வெளியீட்டு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருந்தார். அவர் இத்திரைப்படம் மார்ச் மாதம் 5-ஆம் தேதி என வெளியாகும் என அறிவித்துள்ளார் இதனால் இவரது ரசிகர்கள் மட்டுமின்றி நடிகர் எஸ் ஜே சூர்யாவின் ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

From around the web