ரெளடி பேபி, கொலைவெறி: ஒரே நாளில் இரண்டு சாதனை: தனுஷ் டுவீட்

 

தான் நடித்த படங்களில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் ஒரே நாளில் இரண்டு சாதனை செய்திருப்பதாக தனுஷ் பதிவு செய்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இதுகுறித்து தனுஷ் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது: இன்று ரவுடி பேபி பாடல் ஒரு ஒரு பில்லியன் பாவனையாளர்களை கடந்துள்ளது. அதேபோல் கொலைவெறி பாடல் ரிலீஸாகி இன்றுடன் ஒன்பது வருடங்கள் ஆகிவிட்டனஇன்று ஒரே நாளில் இந்த இரண்டு பாடல்களும் சாதனை செய்தது எனக்கு மிகப் பெருமையாக உள்ளது. தென் இந்திய திரைப்பட வரலாற்றில் ஒரு பாடல் ஒரு பில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது இதுவே முதல்முறை என்ற பெருமைக்கு வித்திட்ட எங்களது படக்குழுவினர் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது டுவிட்டரில் தனுஷ் குறிப்பிட்டுள்ளார். இந்த டுவிட் தற்போது மிக வேகமாக வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web