ஆரி சேவ் என்று கமல் சொன்ன உடன் போட்டியாளர்களின் ரியாக்சன்!

 

ஒவ்வொரு வாரமும் ஆரி நாமினேட் செய்யப்படுவார் என்பதும் ஆனால் அவர்தான் முதல் முறையாக சேவ் செய்யப்படுவார் என்பதையும் கடந்த 12 வாரங்களாக பிக் பாஸ் வீட்டில் பார்த்து வருகிறோம்

பிக் பாஸ் வீட்டில் முதல் முதலாக முதல் வாரத்தில் மட்டும் தான் ஆரி நாமினேஷன் செய்யப்படவில்லை அதேபோல் அவர் கேப்டனாக இருந்த வாரமும் நாமினேஷன் செய்யப்படவில்லை. இந்த இரண்டு வாரம் தவிர அனைத்து வாரங்களிலும் ஆரி நாமினேட் செய்யப்பட்டார் என்பதும் ஆனால் அவர்தான் முதல் நபராக சேவ் செய்யப்பட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது 

aari

ஆரியை எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு சக போட்டியாளர்கள் அவரை தொடர்ந்து நாமினேட் செய்து வந்தாலும் அவர் தனது திறமையான மற்றும் புத்திசாலித்தனமான விளையாட்டால் பார்வையாளர்களின் நன்மதிப்பைப் பெற்றது தப்பித்து விடுகிறார் 

அந்த வகையில் இந்த வாரமும் ஆரி நாமினேட் செய்யப்பட்ட நிலையில் நேற்றும் ஆரி முதலாவதாக செய்யப்பட்டதாக கமலஹாசன் அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியானதும் பாலாஜி ரம்யா சோம், ரியோ உள்ளிட்டவர்கள் அதிர்ச்சி ஆனார்கள் என்பது அவர்கள் முக பாவனையில் இருந்தது தெரியவந்தது

மேலும் அடுத்த வாரம் ஆரி கேப்டன் என்பதால் அவரை யாரும் நாமினேட் செய்ய முடியாது. அதற்கு அடுத்து ஒரே ஒரு வாரம் மட்டுமே இருப்பதால் ஆரி கிட்டத்தட்ட இறுதிப் போட்டிக்குச் சென்று விட்டதாகவே கருதப்படுகிறது

From around the web