மேக்கப் இன்றி காருக்குள் ஒரு கவிதை...ரஷ்மிகா மந்தனா

தற்போது மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வரும் நடிகை ரஷ்மிகாவிற்கு ரசிகர் பட்டாளம் அதிகரித்து வருகின்றது.
 

தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் இளம் நடிகையாக பிரபலமாகியுள்ளவர் நடிகை ரஷ்மிகா மந்தனா.

கன்னட திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தாலும், கீதா கோவிந்தம் என ஒரே திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களை கவர்ந்து விட்டார்.

தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் ரஷ்மிகா, தற்போது கார்த்தி நடித்துள்ள சுல்தான் எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையுலகிலும் அறிமுகமாகியுள்ளார்.

நடிகை ரஷ்மிகா மந்தனாவின் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுண்டு. அந்த வகையில் துளி கூட மேக்கப் போடாமல், தனது காருக்குள் இருக்கும் நடிகை ரஷ்மிகா மந்தனாவின் புகைப்படம் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

From around the web