ஐடி ரெய்டால் வெளியான நடிகையில் சம்பள ரகசியம்...

ரஷ்மிகா வீட்டில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தி, ரொக்க பணம், நகைகள் மற்றும் சொத்து ஆவணங்களை கைப்பற்றினர்.
 

நடிகை ரஷ்மிகா மந்தனா தற்போது தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகையாக விளங்குபவர், இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

கன்னட மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கும் ரஷ்மிகா, தற்போது தமிழிலும் சுல்தான் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். இந்நிலையில் ஏற்கனவே கர்நாடகாவில் உள்ள அவரின் வீட்டில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தி, ரொக்க பணம், நகைகள் மற்றும் சொத்து ஆவணங்களை கைப்பற்றினர்.

இது குறித்து பேசியுள்ள ரஷ்மிகா "நான் ஒரு படத்துக்கு ரூ.2 கோடி சம்பளம் வாங்குவதாக அப்போது தகவல் பரவியது. அந்த செய்திகள்தான் வருமானவரி துறையினர் சோதனைக்கு காரணம். உண்மையில் நான் ரூ.2 கோடி சம்பளம் வாங்கவில்லை. நான் அவ்வளவு பெரிய தொகையை கேட்டாலும் தயாரிப்பாளர்கள் தர மாட்டார்கள்"

கதாநாயகனுக்கே அவ்வளவு சம்பளம் தருவது இல்லை. உங்களுக்கு எப்படி தர முடியும் என்பார்கள்" என கூறியுள்ளார்.

From around the web