பா.ரஞ்சித்தின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு: ஹீரோ யார்?

அட்டக்கத்தி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் பா ரஞ்சித் அதன்பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி, காலா ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கி முன்னணி திரைப்பட இயக்குனர்கள் பட்டியலில் இணைந்தார் என்பது தெரிந்ததே ஆனால் அதே நேரத்தில் காலா படத்திற்கு பின்னர் அவர் இன்னும் ஒரு படத்தைக்கூட கடந்த இரண்டு ஆண்டுகளாக இயக்கவில்லை. இருப்பினும் அவர் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ’பரியேறும் பெருமாள்’ மற்றும் ’இரண்டாம் உலகப் போரின் கடைசி
 

பா.ரஞ்சித்தின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு: ஹீரோ யார்?

அட்டக்கத்தி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் பா ரஞ்சித் அதன்பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி, காலா ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கி முன்னணி திரைப்பட இயக்குனர்கள் பட்டியலில் இணைந்தார் என்பது தெரிந்ததே

ஆனால் அதே நேரத்தில் காலா படத்திற்கு பின்னர் அவர் இன்னும் ஒரு படத்தைக்கூட கடந்த இரண்டு ஆண்டுகளாக இயக்கவில்லை. இருப்பினும் அவர் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ’பரியேறும் பெருமாள்’ மற்றும் ’இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ ஆகிய இரண்டு திரைப்படங்களை தயாரித்தார் என்பதும், தற்போது ஒரு திரைப்படத்தை அவர் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன் நீலம் புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் டைட்டில் ’குதிரை வால்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

கலையரசன் ஹீரோவாகவும், அஞ்சலி பட்டீல் ஹீரோயினியாகவும் நடிக்கும் இந்த படத்தை மனோஜ் லியோனெ மற்றும் சியாம் சுந்தர் ஆகிய இருவர் இயக்க உள்ளனர். பிரதீப் குமார் என்பவர் இசையமைக்கும் இந்த படத்திற்கு கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

From around the web