ராணா டகுபதியின் திருமண தேதி வெளியானது…

ராணா டகுபதி திருமண தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. வில்லன் ராணா டகுபதி பாகுபலி படத்தின் மூலம் தமிழ், மலையாள, கன்னட, இந்தி ரசிகர்கள் என அனைவர் மத்தியிலும் பிரபலமாகிப் போனார். அதன்பின்னர் அவர் பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார், இவர் ஏற்கனவே அஜித்தின் ஆரம்பம் படத்தில் நடித்திருந்தாலும், இவருக்கு முகம் கொடுத்தது பாகுபலிதான். இவர் குறித்த திருமண விஷயங்கள் அவ்வப்போது செய்திகளாக வந்தவண்ணமே உள்ளது. அவற்றிற்கு முற்றுப்புள்ளிவைக்கும் வகையில் சமீபத்தில் நடிகர் ராணா
 
ராணா டகுபதியின் திருமண தேதி வெளியானது…

ராணா டகுபதி திருமண தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. வில்லன் ராணா டகுபதி பாகுபலி படத்தின் மூலம் தமிழ், மலையாள, கன்னட, இந்தி ரசிகர்கள் என அனைவர் மத்தியிலும் பிரபலமாகிப் போனார்.

அதன்பின்னர் அவர் பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார், இவர் ஏற்கனவே அஜித்தின் ஆரம்பம் படத்தில் நடித்திருந்தாலும், இவருக்கு முகம் கொடுத்தது பாகுபலிதான்.

ராணா டகுபதியின் திருமண தேதி வெளியானது…

இவர் குறித்த திருமண விஷயங்கள் அவ்வப்போது செய்திகளாக வந்தவண்ணமே உள்ளது. அவற்றிற்கு முற்றுப்புள்ளிவைக்கும் வகையில் சமீபத்தில் நடிகர் ராணா 10 நாட்களுக்கு முன்னர் தன்னுடைய காதலி மிஹீகா பஜா குறித்து ட்விட்டரில் அறிவித்தார்.

மிஹீகா, டியூ டிராப் டிசைன் ஸ்டுடியோவின் நிறுவனர் என்று குறிப்பிட்டதோடு, இவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தார்.

இந்தநிலையில் ராணாவும்-  மிஹீகா பஜாவுக்கு நிச்சயதார்த்தம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் நடைபெற்றதாக சமீபத்தில் புகைப்படங்கள் வெளியாகின.

அதாவது, ராணாவின் திருமணம் ஆகஸ்ட் 8 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ராணா சார்பிலும் பெண் வீட்டார் சார்பிலும் திருமணத்திற்கான பணிகள் ஒருபுறம் துவங்கி நடைபெற்று வருகின்றன.

மேலும் திருமணத்தை ஹைதராபாத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

From around the web