ஆரியின் குறைகளை யோசித்து யோசித்து சொல்லிய ரம்யா!

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று குறைசொல்லும் டாஸ்கில் ஒவ்வொரு போட்டியாளரும் சக போட்டியாளர்களின் குறைகளை கூறிய நிலையில், குறை சொல்ல வந்த ரம்யா தன்னுடைய மனதில் உள்ள அத்தனையும் பொரிந்து தள்ளிவிட்டார் என்று சொல்லலாம்

குறிப்பாக ஆரியின் குறைகளை அவர் அதிக நேரம் சுட்டிக்காட்டினார். குரூப்பாக இருந்துகொண்டு இன்ஃளூயன்ஸ் செய்வதாக ஆரி கூறுகிறார். ஆனால் 4 கோடி மக்களை இன்ஃளூயன்ஸ் செய்வதற்காக ஒவ்வொருவரின் குறைகளை அவர் சுட்டிக் காட்டுகிறார் என்று நான் ஏன் நினைக்க கூடாது? என்று கூறியதை அடுத்து ரியோ உள்பட அனைவரையும் அதற்கு ஆமோதித்தனர்.

ramya

மேலும் பிக்பாஸ் போன்ற வீட்டில் இருக்கும் போது ஒவ்வொருவரின் குறைகளை மட்டுமே சுட்டிக் காட்டக் கூடாது என்றும் அதே போன்று தான் ஒரு முடிவை எடுக்கும்போது அந்த முடிவை அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஆரியின் தவறுகளில் ஒன்று என்றும் அவர் கூறினார்

சக போட்டியாளர்களின் குறைகளை மட்டுமே கண்டுபிடிக்காமல் அவர்களிடம் உள்ள நல்ல பழக்க வழக்கங்களையும் அவர் பாராட்ட வேண்டும் என்றும் அவ்வாறு அவர் செய்தது இல்லை என்றும் ரம்யா கூறினார் 

மொத்தத்தில் நேற்று ரம்யா ஆரியின் குறைகளை யோசித்து யோசித்து கிட்டத்தட்ட தனது மனதிலிருந்த அனைத்தையும் கொட்டி விட்டார் என்று சொல்லலாம்

From around the web