விவேக் நினைவாக 59 மரங்களை நட்ட ரம்யா பாண்டியன்: குவியும் வாழ்த்துக்கள்

 
விவேக் நினைவாக 59 மரங்களை நட்ட ரம்யா பாண்டியன்: குவியும் வாழ்த்துக்கள்

பிரபல காமெடி நடிகர் விவேக் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாரடைப்பு காரணமாக காலமானார். இந்த நிலையில் அவரது நினைவாக பல திரையுலக பிரபலங்கள் மரங்களை நட்டு வருகின்றனர்

ஒரு கோடி மரங்களை தமிழகத்தில் நட வேண்டும் என்ற இலக்கை நோக்கி சென்று கொண்டிருந்த விவேக்கின் கனவு நனவாகாமல் போய் விட்டதை அடுத்து அவரது கனவை நனவாக்கும் வகையில் பல திரையுலக பிரபலங்கள் அரசியல் தலைவர்களும் மரங்களை நட்டு வருகின்றனர்

ramya

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ரம்யா பாண்டியன் இன்று திருவள்ளூர் ஆயுதப்படை மைதானத்தில் 59 மரக்கன்றுகளை நட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் எஸ்பி அரவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

விவேக் தனது 59வது வயதில் காலமானதை அடுத்து 59 மரக்கன்றுகள் நடும் விழாவில் ரம்யா பாண்டியன் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து எனது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது


 

From around the web