அம்மா அப்பா விவாகரத்து குறித்து 20 வருடங்கள் கழித்து கருத்து சொன்ன ராமராஜன் மகள்

நடிகர் ராமராஜன் மற்றும் நடிகை நளினி ஆகிய இருவரும் கடந்த 1987ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு அருணா மற்றும் அருண் ஆகிய இரட்டை குழந்தைகள் பிறந்தன என்பது குறிப்பிடப்பட்டது இந்த நிலையில் கடந்த 2000ம் ஆண்டு ராமராஜன்-நளினி ஆகிய இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். அவர்கள் இருவருமே இணைந்து தங்கள் குழந்தைகளிடம் தங்கள் விவகாரத்து குறித்து புரிய வைத்ததாகவும் தெரிகிறது இந்த நிலையில் 20 வருடங்கள் கழித்து ராமராஜன்-நளினி
 

அம்மா அப்பா விவாகரத்து குறித்து 20 வருடங்கள் கழித்து கருத்து சொன்ன ராமராஜன் மகள்

நடிகர் ராமராஜன் மற்றும் நடிகை நளினி ஆகிய இருவரும் கடந்த 1987ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு அருணா மற்றும் அருண் ஆகிய இரட்டை குழந்தைகள் பிறந்தன என்பது குறிப்பிடப்பட்டது

இந்த நிலையில் கடந்த 2000ம் ஆண்டு ராமராஜன்-நளினி ஆகிய இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். அவர்கள் இருவருமே இணைந்து தங்கள் குழந்தைகளிடம் தங்கள் விவகாரத்து குறித்து புரிய வைத்ததாகவும் தெரிகிறது

இந்த நிலையில் 20 வருடங்கள் கழித்து ராமராஜன்-நளினி மகள் அருணா, தங்களது பெற்றோர்கள் பிரிந்து தனது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். எனது அம்மாவும் அப்பாவும் பிரிந்து விட்டாலும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டியதில்லை என்றும் விவாகரத்துக்குப் பின்னர் இருவரும் எந்த ஒரு தவறாக கருத்தையும் ஒருவர் மீது ஒருவர் தெரிவிக்கவில்லை என்றும் கூறினார்

மேலும் விவாகரத்து வழங்கப்பட்ட அன்று தனது அம்மா நீதிமன்றத்திலேயே மயக்கம் போட்டு விழுந்து விட்டதாகவும் உடனே ஓடோடி வந்த ராமராஜன் அவரை தூக்கி மடியில் வைத்துக் கொண்டு தண்ணீர் தெளித்ததாகவும், இதை பார்த்த நீதிபதி உண்மையாகவே நீங்கள் விவாகரத்து பெற விரும்புகிறீர்களா? என்று கேட்டதாகவும் அருணா கூறியுள்ளார் மேலும் அம்மா அப்பா ஆகிய இருவரும் பிரிந்து இருந்தாலும் என் மீதும் எனது சகோதரர் மீது இருவருமே மிகுந்த அன்பு வைத்திருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

From around the web