ரஷ்மிகா மந்தனாவின் ஆடிஷன் வீடியோ... அச்சோ சோ க்யூட் மேடம் நீங்க...

 நடிகை ரஷ்மிகாவை ஆடிஷன் செய்த பொது எடுக்கப்பட்ட வீடியோவை பதிவிட்டுள்ளார்
 

தென்னிந்திய திரையுலகில் தற்போது முன்னணி கதாநாயகியாக விளங்குபவர் தான் நடிகை ரஷ்மிகா மந்தனா, இவருக்கு தற்போது பெரிய ரசிகர்கள் வட்டம் உருவாகியுள்ளது.

கன்னட திரையுலகின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான ரஷ்மிகா மந்தனா அங்கு முன்னணி நடிகையாக மாறினார். அதனை தொடர்ந்து தெலுங்கு திரைப்படங்களில் தனது கவனத்தை செலுத்தி வந்த நடிகை ரஷ்மிகா, இந்தியளவில் பலருக்கும் பிடித்த நடிகையாகும் அளவு பிரபலமானார்.

மேலும் பல வருட காத்திருப்பிற்கு பின் ரஷ்மிகா தமிழில் சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். கிராமத்து பெண்ணாக சுல்தான் படத்தில் அசதியுள்ள ரஷ்மிகா தமிழிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வரவுள்ளார்.

இந்நிலையில் இன்று நடிகை ரஷ்மிகாவின் பிறந்தநாள் என்பதால் அவர் நடித்த அறிமுக திரைப்படமான கிரிக் பார்ட்டி என்ற படத்தின் இயக்குனர் ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆம், இப்படத்திற்காக நடிகை ரஷ்மிகாவை ஆடிஷன் செய்த பொது எடுக்கப்பட்ட வீடியோவை பதிவிட்டுள்ளார். இதனை கண்ட அவரின் ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.


 

From around the web