என்னது இவருக்கு திருமணம் ஆகிடுச்சா? ஷாக்கான பெண்கள்!!!

ரக்ஷனுக்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தை இருப்பதாக தகவல் வெளியாகி பெண்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. வரவர பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ரசிகர் பட்டாளம் இந்த நிகழ்ச்சிக்கும் உருவாகியுள்ளது. 

போட்டியாளர்களுக்கும் சரி, கோமாளிகளுக்கும் சரி தனித்தனியே ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்றே சொல்லலாம். அதிலும் முக்கியமாக புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை என கடந்த சீசனில் இருந்த கோமாளிகள் இந்த சீசனிலும் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமைக்க படாதபாடு படும் காட்சிகள் ரசிகர்களை குலுங்கி, குலுங்கி சிரிக்க வைக்கிறது. இந்நிலையில் இந்த ஷோவிற்காக ரசிகர்கள் காத்திருந்து பார்க்கும் அளவிற்கு மிகப்பெரிய ரீச் அடைந்துள்ளது.

அதேபோல் விஜய் டிவியில் கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி 'கலக்கப்போவது யாரு'. இந்த நிகழ்ச்சியின் கடந்த 5, 6, 7 சீசன்களை ஜாக்லினுடன் சேர்ந்து தொகுத்து வந்தவர் ரக்ஷன். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவர் அறந்தாங்கி நிஷா உடன் குக் வித் கோமாளி சீசன் ஒன்னை தொகுத்து வழங்கி வந்தார். 

இந்நிலையில் நிஷா பிக்பாஸ் சென்று விட இரண்டாம் சீசனை சிங்கிள் ஆங்கராக தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில் துல்கர் சல்மானுடன் "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்" என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகர் ரக்ஷன் தற்போது ஒரு பதிவிட்டுள்ளார். 

அதில் பெண் ஒருவருடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, "என் மனைவி. சிறுவயதில் நாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம். பத்து வருடத்திற்கு முன்பு அவளுடன்" என்று கூறியுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுவரை ரக்ஷன் திருமணம் ஆகாதவர் என்றுதான் பலரும் நினைத்திருந்தனர். இந்நிலையில் ரக்ஷனுக்கு திருமணம் ஆகிவிட்டதா? போன்ற கேள்விகளை தொடுத்து வருகின்றனர். இது குறித்து அவர் இன்னும் பதில் கூறவில்லை.
 

From around the web