போடு! "ரகிட ரகிட" டீஸர் அவுட்!

"ஜகமே தந்திரம்" திரைப்படத்தின் டீஸர் வெளியானது!
 
மிகவும் வைரலாக பரவும் "ஜகமே தந்திரம்" டீஸர்!

தனது  நடிப்பாலும் தனது திறமையாலும் இன்று மிகப்பெரிய நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருப்பவர் "நடிகர் தனுஷ்".  தனுஷ் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் "அசுரன்". அசுரன் திரைப்படத்தில் ஒவ்வொரு சண்டைக்காட்சிகளும் மக்களை மெய்சிலிர்க்க வைத்தது. மேலும் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகிய"ஆடுகளம்"," வட சென்னை" போன்ற திரைப்படங்களும் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற வெற்றி படமாக அமைந்தது.

jagame thandhiram

குறிப்பாக இவர் நடிப்பில் வெளியாக "வேலையில்லா பட்டதாரி" என்ற திரைப்படம் இளைஞர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்று மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக "நடிகை அமலாபால்" நடித்து இருந்தார். தற்போது நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "ஜகமே தந்திரம்" திரைப்படத்தின் டீஸர் வெளியானது. இதனைக் காணும் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் உற்சாகத்தில் உள்ளனர். ஜகமே தந்திரம் திரைப்படத்தில் இவரது கெட்டப் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் டீசருக்கு லைக்ஸ் வந்த வண்ணமாக உள்ளது.

சில நாட்கள் முன்பே இவர் நடிப்பில் உருவாகியுள்ள "கர்ணன்" திரைப்படத்தின் பாடல் ஒன்று வெளியாகியது.தற்போது "ஜகமே தந்திரம்" திரைப்படத்தின் டீசர் வெளியானதால் இவரது ரசிகர்கள் மிகவும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

From around the web