மாஸ்க் அணிந்து ஜனநாயக கடமை ஆற்றிய ரஜினி 

மாஸ்க் அணிந்து வாக்களிக்க வேண்டும் என்கிற அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தின் விதியை பின்பற்றும் வகையில் ரஜினிகாந்த் மாஸ்க் அணிந்து வாக்களித்தார்.
 
மாஸ்க் அணிந்து ஜனநாயக கடமை ஆற்றிய ரஜினி

தமிழக சட்டசபைக்கு இன்று காலை 7 மணி தொடங்கி ஒரே கட்டமாக தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடத்தப்படுகிறது. 

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்றிவருகின்றனர்.  குறிப்பாக அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் காலையிலேயே ஓட்டு போட்டு வருகின்றனர்.

அவ்வகையில் நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடிக்கு காரில் வருகை தந்தார். அவரை ரசிகர்கள் புடைசூழ, ரஜினி வாக்களிக்கச் சென்றார். குறிப்பாக மாஸ்க் அணிந்து வாக்களிக்க வேண்டும் என்கிற அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தின் விதியை பின்பற்றும் வகையில் ரஜினிகாந்த் மாஸ்க் அணிந்து வாக்களித்தார்.

From around the web