அபாய கட்டத்தை தாண்டி விட்டதற்கு மகிழ்ச்சி: வைரலாகும் ரஜினியின் வீடியோ

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் விரைவாக குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என ஒட்டுமொத்த திரையுலகமே பிரார்த்தனை செய்து வருகிறது என்பது தெரிந்ததே ஏற்கனவே இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏஆர் ரகுமான், உலகநாயகன் கமலஹாசன், கவியரசு வைரமுத்து, இயக்குனர் இமயம் பாரதிராஜா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உள்பட பலர் தங்கள் சமூக வலைத்தளங்களில் இது குறித்த பதிவுகளை செய்துள்ளனர் என்பதை பார்த்தோம் இந்த நிலையில் சற்று முன் சூப்பர்
 

அபாய கட்டத்தை தாண்டி விட்டதற்கு மகிழ்ச்சி: வைரலாகும் ரஜினியின் வீடியோ

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் விரைவாக குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என ஒட்டுமொத்த திரையுலகமே பிரார்த்தனை செய்து வருகிறது என்பது தெரிந்ததே

ஏற்கனவே இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏஆர் ரகுமான், உலகநாயகன் கமலஹாசன், கவியரசு வைரமுத்து, இயக்குனர் இமயம் பாரதிராஜா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உள்பட பலர் தங்கள் சமூக வலைத்தளங்களில் இது குறித்த பதிவுகளை செய்துள்ளனர் என்பதை பார்த்தோம்

இந்த நிலையில் சற்று முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் உள்ள பல மொழிகளில் தன்னுடைய இனிமையான குரலில் பாடி கோடி கோடி மக்களை மகிழ்வித்த எஸ்பிபி அவர்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார் என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இன்னும் தீவிர சிகிச்சையில் இருக்கும் எஸ்பிபி அவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

From around the web