நேற்று எல்.முருகன் வேண்டுகோள், இன்று ரஜினிகாந்த் டுவீட்

கந்தஷ்டி கவசம் விவகாரம் குறித்து ரஜினிகாந்த் குரல் கொடுக்க வேண்டும் என்றும், அவர் ஒரு பெரிய ஆன்மிகவாதி என்றும் நேற்று பாஜக தமிழக தலைவர் வேண்டுகோள் விடுத்தார். இந்த வேண்டுகோளை அடுத்து சற்றுமுன் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் இதுகுறித்து ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். அவர் கூறியதாவது: கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து பல கோடி தமிழ் மக்களின் மனதை புண்படுத்தி, கொந்தளிக்கச் செய்த இந்த ஈனச்செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி, தவறு
 
நேற்று எல்.முருகன் வேண்டுகோள், இன்று ரஜினிகாந்த் டுவீட்

கந்தஷ்டி கவசம் விவகாரம் குறித்து ரஜினிகாந்த் குரல் கொடுக்க வேண்டும் என்றும், அவர் ஒரு பெரிய ஆன்மிகவாதி என்றும் நேற்று பாஜக தமிழக தலைவர் வேண்டுகோள் விடுத்தார். இந்த வேண்டுகோளை அடுத்து சற்றுமுன் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் இதுகுறித்து ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். அவர் கூறியதாவது:

கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து பல கோடி தமிழ் மக்களின் மனதை புண்படுத்தி, கொந்தளிக்கச் செய்த இந்த ஈனச்செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி, தவறு செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். இனிமேலாவது மதத் துவேஷமும் கடவுள் நிந்தனையும் ஒழியட்டும். ஒழியனும். எல்லா மதமும் சம்மதமே. கந்தனுக்கு அரோகரா!!

இந்த டுவிட்டை எல்.முருகனின் வேண்டுகோளுக்காக ரஜினி பதிவு செய்தாரா? அல்லது தற்செயலாக பதிவு செய்தாரா? என்பது தெரியவில்லை. ஆனால் ரஜினி என்ன செய்தாலும் அது டிரண்டாகும் என்பது உண்மை என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. கந்தனுக்கு அரோகரா!! என்ற ஹேஷ்டேக் ஒருசில நிமிடங்களில் அகில இந்திய அளவில் டிரெண்ட் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web