டுவிட்டரில் டேக் செய்த அமைச்சருக்கு நன்றி கூறிய ரஜினிகாந்த்

கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்காரியால் அவர்கள் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் முதலாவது இணை இயக்குனராக ஆர் சந்திரசேகரன் என்பவரை நியமித்தார். தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதை அடுத்து மத்திய அரசுக்கு தமிழ் ஆர்வலர்கள் நன்றி தெரிவித்தனர். இந்த நிலையில் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்காரியால் அவர்கள் இந்த தகவலை டுவிட்டரில் தெரிவிக்கும்போது பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ரஜினிகாந்த்
 
டுவிட்டரில் டேக் செய்த அமைச்சருக்கு நன்றி கூறிய ரஜினிகாந்த்

கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்காரியால் அவர்கள் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் முதலாவது இணை இயக்குனராக ஆர் சந்திரசேகரன் என்பவரை நியமித்தார். தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதை அடுத்து மத்திய அரசுக்கு தமிழ் ஆர்வலர்கள் நன்றி தெரிவித்தனர்.

இந்த நிலையில் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்காரியால் அவர்கள் இந்த தகவலை டுவிட்டரில் தெரிவிக்கும்போது பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர்களுக்கு டேக் செய்திருந்தார். ரஜினியை அமைச்சர் டேக் செய்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தனக்கு டேக் செய்த மத்திய அமைச்சருக்கு ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில், ‘மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்துக்கு புதிய இயக்குநரை நியமனம் செய்ததற்கு நன்றி என்றும், தமிழ் மொழியை மேலும் வலுப்படுத்தவும், இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளின் வளர்ச்சிக்கும் மத்திய அரசு பாடுபட்டு அமைச்சர் ரமேஷ் பொக்காரியால் அவர்களுக்கு பாராட்டு என்றும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் டேக் செய்த அமைச்சருக்கு நன்றி கூறிய ரஜினிகாந்த்

From around the web