திமுகவின் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து கூறிய ரஜினிகாந்த்!

ரஜினி அரசியலுக்கு வந்தால் திமுக மீண்டும் பதவிக்கு வர முடியாது என்று அரசியல் விமர்சகர்கள் பலர் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் புதியதாக தேர்வான திமுக பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய இருவருக்கும் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு துரைமுருகன் அவர்களுக்கும், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு டி.ஆர். பாலு அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

ரஜினி கட்சி ஆரம்பித்தால் அரசியலில் அவருக்கு கடும் போட்டியாக இருப்பது திமுக மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அக்கட்சியின் புதிய நிர்வாகிகளுக்கு ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web