பாலிவுட்டில் தொடர் சோகங்கள்.. ரஜினி, கமல் உருக்கம்!!

பாலிவுட் நடிகரான ரிஷி கபூர், இயக்குனராகவும், பட தயாரிப்பாளராகவும் பாலிவுட்டில் பல ஆண்டுகளாக வலம் வந்தவர். இவர் 1973 ஆம் ஆண்டு பாபி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக பாலிவுட்டில் கால் பதித்துள்ளார். சினிமாவில் கால் பதித்து 47 ஆண்டுகள் ஆன நிலையில், கடைசியாக சின்டுஜி என்னும் திரைப்படத்தின்மூலம் சினிமாவுக்கு முற்றுப் புள்ளி வைத்தார். ஏறக்குறைய 100 படங்கல் நடித்த இவருக்கு 2018 ஆம் ஆண்டு கேன்சர் ஏற்பட்டது. இதனால், வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று பூரண
 
பாலிவுட்டில் தொடர் சோகங்கள்.. ரஜினி, கமல் உருக்கம்!!

பாலிவுட் நடிகரான ரிஷி கபூர், இயக்குனராகவும், பட தயாரிப்பாளராகவும் பாலிவுட்டில் பல ஆண்டுகளாக வலம் வந்தவர்.

இவர் 1973 ஆம் ஆண்டு பாபி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக பாலிவுட்டில் கால் பதித்துள்ளார். சினிமாவில் கால் பதித்து 47 ஆண்டுகள் ஆன நிலையில், கடைசியாக சின்டுஜி என்னும் திரைப்படத்தின்மூலம் சினிமாவுக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.

ஏறக்குறைய 100 படங்கல் நடித்த  இவருக்கு 2018 ஆம் ஆண்டு கேன்சர் ஏற்பட்டது. இதனால், வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று பூரண குணமடைந்த பின்னர் இந்தியா வந்தடைந்தார்.  

இந்தநிலையில், நேற்று இரவு ரிஷி கபூருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட, அவர் மும்பையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றார், ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பாலிவுட்டில் தொடர் சோகங்கள்.. ரஜினி, கமல் உருக்கம்!!

நேற்று பாலிவுட் நடிகர் இர்பான் கான் மரணமடைந்ததை அடுத்த ரிஷி கபூரின் மறைவு குறித்த செய்தியால் திரை உலகினர் சோகத்தில் உள்ளனர்.

மேலும் ரிஷி கபூருக்கு பாலிவுட் நடிகர்களான ஷாருக்கான், அமீர்கான், சல்மான் கான், அக்ஷய் குமார் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழ் சினிமாவினைப் பொறுத்தவரை ரிஷி கபூரின் நண்பர்களான ரஜினி மற்றும் கமல் இருவரும் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

மேலும் உருக்கமான பதிவினையும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

From around the web