ஐதராபாத் அப்பல்லோவில் ரஜினிகாந்த் அனுமதி: இதுதான் காரணம்!

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருந்த அண்ணாத்த திரைப்படத்தின் படக்குழுவினர் சிலருக்கு திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் அவர் தன்னைத்தானே ஹைதராபாத்தில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது திடீரென ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் ’ரஜினிகாந்த் அவர்களுக்கு ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் அவரை அவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் அவரது ரத்த அழுத்தம் தற்போது சீராக இருப்பதாகவும் விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

apollo hospital

மேலும் ரஜினிகாந்துக்கு ரத்த அழுத்த மாறுபாடு தவிர கோவிட்-19 உட்பட வேறு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web