ரஜினி படம் அடுத்த மாதம் துவக்கம்

ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிப்பேன் என்று சொல்லி ஒரு வருடத்துக்கும் மேலாகி விட்ட நிலையில் இது வரை கட்சி ஆரம்பிக்கவில்லை. தூத்துக்குடி உள்ளிட்ட பிரச்சினைகளிலும், ஏழு பேர் விடுதலை குறித்த பிரச்சினைகளிலும் கருத்து சொல்லி அது பெரும் சர்ச்சையில் போய் முடிந்தது. இருப்பினும் அரசியல் ரீதியாக, பொது விசயங்கள் சம்பந்தமாக கருத்துக்கள் சொல்லி வந்ததால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் பேட்ட படம் முடிந்த உடன் அரசியல் கட்சி பற்றி அறிவிப்பார் என்றும் செய்தி வெளியானது. இந்நிலையில் பேட்ட
 

ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிப்பேன் என்று சொல்லி ஒரு வருடத்துக்கும் மேலாகி விட்ட நிலையில் இது வரை கட்சி ஆரம்பிக்கவில்லை.

ரஜினி படம் அடுத்த மாதம் துவக்கம்

தூத்துக்குடி உள்ளிட்ட பிரச்சினைகளிலும், ஏழு பேர் விடுதலை குறித்த பிரச்சினைகளிலும் கருத்து சொல்லி அது பெரும் சர்ச்சையில் போய் முடிந்தது.

இருப்பினும் அரசியல் ரீதியாக, பொது விசயங்கள் சம்பந்தமாக கருத்துக்கள் சொல்லி வந்ததால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் பேட்ட படம் முடிந்த உடன் அரசியல் கட்சி பற்றி அறிவிப்பார் என்றும் செய்தி வெளியானது.

இந்நிலையில் பேட்ட படம் வந்து வெற்றியும் பெற்று விட்டது.நாடாளுமன்ற தேர்தல் மிக நெருங்கி வரும் இவ்வேளையில் ரஜினிகாந்த் கட்சி பற்றிய அறிவிப்பினை வெளியிடவில்லை.

அடுத்த மாதம் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் படத்தின் ஷூட்டிங் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

From around the web