ரஜினி முதன் முதலில் வாங்கிய Fiat கார் இது தானாம்

ரஜினி அவரின் Fiat காருடன் எடுத்துகொண்ட புகைப்படம் வெளியாகி உள்ளது. 

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர், இவருக்கு உலகமெங்கிலும் அதிகபடியான ரசிகர்கள் காணப்படுகின்றனர்.

அந்த வகையில் இவர் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படம் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கபட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதனிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இந்திய திரையுலகின் மிக உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது. இதனால் அவரின் ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் ரஜினி தர்பார் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் தான் முதன்முதலில் வாங்கிய Fiat கார் குறித்த கதையை கூறினார். அந்த மாஸ் கதை சமூக வலைத்தளத்தில் பெரியளவில் பேசப்பட்டது.

மேலும் தற்போது ரஜினி அவரின் Fiat காருடன் எடுத்துகொண்ட புகைப்படம் வெளியாகி உள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

From around the web