ரஜினி படத்தில் யோகிபாபு

தமிழில் வளர்ந்து விட்ட மிகப்பெரிய காமெடி நடிகர் யோகிபாபு. ஆரம்பகாலங்களில் சாதாரண வேடங்களில் நடித்து வந்த யோகிபாபு திடீரென காமெடியின் உச்சம் தொட்டார். எல்லா நடிகர்களுடனும் கதாநாயகனுக்கு இணையாக காமெடி வேடத்தில் நடித்து வருகிறார் யோகிபாபு. விஜய், அஜீத்துடன் காமெடி செய்து விட்ட யோகிபாபு, முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில், ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் தான் அவர் வீடு கட்டி குடியேறினார். மிகவும் ‘பிஸி’யாக நடித்து வருவதால், அவருக்கு கால்ஷீட் பிரச்சினை ஏற்படுகிறது. கால்ஷீட் பிரச்சினை
 

தமிழில் வளர்ந்து விட்ட மிகப்பெரிய காமெடி நடிகர் யோகிபாபு. ஆரம்பகாலங்களில் சாதாரண வேடங்களில் நடித்து வந்த யோகிபாபு திடீரென காமெடியின் உச்சம் தொட்டார்.

ரஜினி படத்தில் யோகிபாபு
Actor Yogi Babu in Virumandikum Sivanadikum Movie Photos

எல்லா நடிகர்களுடனும் கதாநாயகனுக்கு இணையாக காமெடி வேடத்தில் நடித்து வருகிறார் யோகிபாபு.

விஜய், அஜீத்துடன் காமெடி செய்து விட்ட யோகிபாபு,
முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில்,
ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் தான் அவர் வீடு கட்டி குடியேறினார். மிகவும் ‘பிஸி’யாக நடித்து வருவதால், அவருக்கு கால்ஷீட் பிரச்சினை ஏற்படுகிறது.

கால்ஷீட் பிரச்சினை காரணமாகவே யோகி பாபுவால் ‘பேட்ட’ படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. ஆனால், ‘சர்கார்’ படத்தில் யோகி பாபு நடித்ததால், ஏ.ஆர்.முருகதாஸ் தனது அடுத்த படத்திலும் அவரை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்.
ரஜினிகாந்தை வைத்து அவர் இயக்கும் புதிய படத்தில் யோகி பாபு நிச்சயம் இருப்பார் என்றே ‘கோலிவுட்’ வட்டாரங்கள் கூறுகின்றன. கால்ஷீட் பிரச்சினை வரக்கூடாது என்பதற்காக முன்கூட்டியே அவரை ஒப்பந்தம் செய்யவும் முருகதாஸ் முடிவு செய்துள்ளார்.
இதனால் ரஜினியுடன் நடிக்கும் யோகி பாபுவின் நீண்ட நாள் ஆசை நிறைவேற உள்ளது. ‘பேட்ட’ படத்தில் தவறிய வாய்ப்பு, முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் கிடைத்துள்ளதால், யோகி பாபு மகிழ்ச்சியில் இருக்கிறாராம்.

From around the web