படமாகிறது ராஜேஷ்குமாரின் க்ரைம் நாவல்; ஹீரோ யார் தெரியுமா?

 

பிரபல க்ரைம் கதை எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் பல நாவல்கள் ஏற்கனவே திரைப்படம் ஆகியிருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு நாவல் திரைப்படமாக வருகிறது

போர் சமயங்களில் ஏற்படும் ஒலி குறித்து ராஜேஷ்குமார் ஒரு நாவல் எழுதி இருந்தார். அந்த நாவல் வாசகர்கள் அனைவரையும் கவர்ந்த நிலையில் இந்த நாவலை மையமாக வைத்து இயக்குனர் எழில் ஒரு திரைப்படம் இயக்க முடிவு செய்துள்ளார் 

இந்த படத்தில் முக்கிய வேடத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் பார்த்திபன் ஆகியோர் நடிக்க உள்ளனர். மேலும் சாய்பிரியா தேவா என்பவர் இந்த படத்தின் நாயகியாக அறிமுகமாக உள்ளார். ரோபோ சங்கர் உள்ளிட்ட ஒருசிலர் இந்த படத்தின் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 

gautham parthiban1

டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தில் கௌதம் கார்த்திக் தனியார் துப்பறியும் நிபுணராக நடிக்கவுள்ளார். அதேபோல் பார்த்திபன் இந்த படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

சஸ்பென்ஸ் திரில்லர் படமான இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியதாகவும் சென்னை கோவை மற்றும் ஊட்டி ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் இயக்குனர் எழில் தெரிவித்துள்ளார் இயக்குனர் எழில் ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த ’வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ உள்பட பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web