அட சேரனா இப்படி- ஆச்சரியத்தில் ரசிகர்கள்

இயக்குநர் சேரன் மென்மையான குடும்ப படங்களுக்கு சொந்தக்காரர்.அற்புதமான படங்கள் பலவற்றை இயக்கி தாய்மார்களையும் குடும்ப ஆடியன்ஸ்களையும் கொள்ளை கொண்டவர் அப்படிப்பட்டவர் அதிரடி ஆக்சனில் இறங்கினால் அதுவும் சிகரெட் பிடித்தபடி ஸ்டைலாக வருவதெல்லாம் ரசிகர்கள் எதிர்பார்க்காத ஒன்று. ‘ராஜாவுக்கு செக்’ என்கிற ஆக்சன் கலந்த எமோஷனல் த்ரில்லர் படத்தில்தான் சேரன் இது போல அதிரடியாக நடித்துள்ளார். சாய் ராஜ்குமார் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். சேரன் இந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளும்போது கதையை கேட்டு இது தன் திறமைக்கு தீனி
 

இயக்குநர் சேரன் மென்மையான குடும்ப படங்களுக்கு சொந்தக்காரர்.அற்புதமான படங்கள் பலவற்றை இயக்கி தாய்மார்களையும் குடும்ப ஆடியன்ஸ்களையும் கொள்ளை கொண்டவர்

அட சேரனா இப்படி- ஆச்சரியத்தில் ரசிகர்கள்

அப்படிப்பட்டவர் அதிரடி ஆக்சனில் இறங்கினால் அதுவும் சிகரெட் பிடித்தபடி ஸ்டைலாக வருவதெல்லாம் ரசிகர்கள் எதிர்பார்க்காத ஒன்று.

‘ராஜாவுக்கு செக்’ என்கிற ஆக்சன் கலந்த எமோஷனல் த்ரில்லர் படத்தில்தான் சேரன் இது போல அதிரடியாக நடித்துள்ளார். சாய் ராஜ்குமார் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார்.

சேரன் இந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளும்போது கதையை கேட்டு இது தன் திறமைக்கு தீனி போடும் நடிப்புக்கு பெரும் சவால் என்று தெரிந்தே ஒப்புக்கொண்டாராம்.

காரணம் கதையில் சொல்லப்பட்டுள்ள விஷயமும் அது ஏற்படுத்தப்போகும் தாக்கமும். வழக்கமாக சேரன் நடிக்கும் படங்கள் இப்படித்தான் இருக்கும் என்று ரசிகர்களுக்கு ஒரு அபிப்ராயம் இருக்கும். ஆனால் அதை முற்றிலும் உடைக்கும் விதத்தில் உருவாகியுள்ளது ‘ராஜாவுக்கு செக்.’ அதை மெய்ப்பிப்பது போல ஒரு நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.

சமீபத்தில் இந்தப்படத்தின் முதல் பிரதி முக்கியமான சிலருக்கு திரையிட்டு காட்டப்பட்டுள்ளது. இது சேரன் படம், குடும்பக் கதையாக இருக்கும் என்கிற நினைப்பில் படம் பார்க்க ஆரம்பித்தவர்களுக்கு ஆச்சரியத்தில் வாய் பிளந்து விட்டார்களாம். காரணம் படம் அதிரடி ஆக்சனில் இருந்ததுதான். காட்சிக்கு காட்சி இப்படத்தில் விறு விறுப்பு அதிகமாக இருந்ததால் இப்படத்தை பார்த்த விநியோகஸ்தர்கள் படத்தை வாங்க முற்றுகையிட்டுள்ளார்களாம்.

From around the web