மார்ச் 12க்கு வரும் "ராஜவம்சம்!"

"இயக்குனர்"," நடிகர்"," புரொடியூசர்" என மூன்று முகங்களை கொண்டவர் "நடிகர் சசிகுமார்". நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியாகிய "சுப்பிரமணியபுரம்" என்ற திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகி வெளியான "நாடோடிகள்" என்ற திரைப்படம் மக்களிடையே நல்லதொரு வரவேற்பு பெற்றது. குறிப்பாக இத்திரைப்படம் நண்பர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பு பெற்று இன்றளவும் பார்த்து ரசிக்கும் படமாக உள்ளது.

மேலும் நடிகர் சசிகுமார் "பிரம்மன்"," குட்டிப்புலி"," கிடாரி" போன்ற பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியாகிய "கிடாரி"," கொடிவீரன்" போன்ற திரைப்படங்களுக்கு "புரொடியூசர்" இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இவர் "சுப்பிரமணியபுரம்" என்ற திரைப்படத்தில் இவரே நடிகராகவும், இயக்குநராகவும் இருந்தார் என்பது மிகவும் பெருமைப்படத்தக்க செயலாகும்.
தற்போது தனது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "ராஜவம்சம்". இத்திரைப்படத்தில் பிரபல காமெடி நடிகர் யோகிபாபு நடித்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் நடிகர் மனோபாலா மற்றும் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். தற்போது இத்திரைப்படமானது மார்ச் மாதம் 12ஆம் தேதியில் வெளியாகும் என திரைப்படத்தின் நாயகனான நடிகர் சசிகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இதனைப் பார்க்கும் ரசிகர்கள் மிகுந்த ஆனந்தத்திலும் கொண்டாட்டத்திலும் மகிழ்ச்சியிலும் உள்ளனர்.
Family entertainment #RajavamsamFromMarch12#Rajavamsam
— M.Sasikumar (@SasikumarDir) February 18, 2021
Tamil Nadu Theatrical Release by @shantitfilms @bKamalBohra
@nikkigalrani @Kvkathirvelu @td_rajha @ChendurFilm @SamCSmusic pic.twitter.com/O3AdPaKaer