போடு பயங்கரம்பாஸ் தளபதி65 அப்டேட்....!

தளபதி 64 " மாஸ்டர் "திரைப்படம் திரையரங்கில் வெளியாகி வேற லெவல் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது . தளபதி 65 படத்தின் அப்டேட்ஸை ராஜசேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள போஸ்டரில் தளபதி 65ல் நடிகை "ராஷ்மிகா மந்தனா" நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் நடிப்பில் வெளியாகி இருந்த "கீதா கோவிந்தம்" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. நடிகை ராஷ்மிகா மந்தனா தளபதி 65ல் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

" புட்ட பொம்மா "என்ற பாடலின் மூலம் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டார் "பூஜா ஹெக்டே" இந்நிலையில் இவரும் தளபதி 65 நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது . மேலும் தளபதி 65ல் "கியாரா அத்வானி" என்ற இந்தி நடிகையும் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் அர்ஜுன் ரெட்டியின் ஹிந்தி ரீமேக்கான கபீர் சிங்கில் நடித்திருந்தார்.
இவ்வாறாக ராஜசேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தளபதி 65 அப்டேட்ஸ் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும் ஆனந்தத்தையும் கொடுத்துள்ளது."மாஸ்டர்" படத்தின் வெற்றியில் இருந்து வெளிவர முடியாத தளபதி விஜயின் ரசிகர்களுக்கு இவர் அறிவித்துள்ள அப்டேட்ஸ் அவர்களுக்கு மேலும் ஆனந்தத்தை அள்ளிக்கொடுத்தது.
The three heroines under consideration for #Thalapathy65. Official confirmation awaited! pic.twitter.com/6vqBLJtKFE
— Rajasekar (@sekartweets) February 6, 2021