தண்ணீரில் மிதக்கும் ரைசா... உண்மையில் இவர் தானா?

 இவர் பிக்பாஸில் கலந்துக்கொண்டதன் மூலம் அனைவரையும் கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் மறக்க முடியாததும், சுவாரசியமாகவும் அமைந்தது என்னவோ சீசன் 1 தான். என்ன சரிதானே? உங்களின் மனநிலையும் இதுவென்றே நம்புகிறோம்.

இதில் கலந்து கொண்டு ரசிகர்களை மிகவும் கவர்ந்த போட்டியாளர்களில் ஒருவர் ரைஸா வில்சன். மாடலான இவர் பேசும் தமிழும், ஸ்டைலும், அடிக்கடி தூங்கி பிக்பாஸ் வீட்டில் நாய் குரைத்ததையும் மறக்க முடியாது.

அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ஹரீஷ் கல்யாணுடன் இணைந்து படத்திலும் ஹீரோயினாக நடித்துவிட்டார்.

மற்ற படங்களிலும் சிறப்பு வேடங்களில் நடித்து வரும் அவர் புகைப்படங்களை எடுத்து தொடர்ந்து சமூக வலைதள பக்கத்தில் வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது அவர் கடலில் மிதந்த படி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் முகம் இதில் தெரியாததால் ரசிகர்கள் போட்டோவில் இருப்பது அவர் தானே சந்தேகம் அடைந்துள்ளனர்.


 

From around the web