தீப்பெட்டி கணேசன் குழந்தைகள் கல்விக்கு உதவுவதாக பிரபல நடிகர் அறிவிப்பு!

 

தமிழ் திரையுலகின் பிரபல காமெடி நடிகர் தீப்பெட்டி கணேசன் இன்று காலை உடல்நலக் குறைவால் காலமானார். இதனையடுத்து திரையுலகினர் அவருடைய குடும்பத்திற்கு ஆறுதல் அளித்தனர் 

கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தீப்பெட்டி கணேசன் சிகிச்சை பலனின்றி இன்று காலமானது அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைய செய்துள்ளது 

ragawa

இந்த நிலையில் தீப்பெட்டி கணேசனின் குழந்தைகளின் கல்விச் செலவுக்கு தான் பொறுப்பு ஏற்பதாக பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டரில் கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

நடிகர் தீப்பெட்டி கணேசன் இன்று காலை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். இவ்வருடம் அவரின் பிள்ளைகளின் படிப்பிற்கான செலவுகளை நான் ஏற்றுக்கொண்டேன். இனிவரும் காலத்திலும் என்னால் இயன்ற அளவு உதவிகளை அவரின் குழந்தைகளுக்கு செய்வேன். கணேசனின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்’ 

இவ்வாறு ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

From around the web