சிம்புவை அடுத்து ராகவா லாரன்ஸ்க்கு ஜோடி சேரும் இளம் நடிகை!

 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ப்ரியா பவானிசங்கர் ஏற்கனவே ’இந்தியன் 2’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் அவர் சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’பத்து தல’ என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் 

இந்த நிலையில் தற்போது ராகவா லாரன்ஸ் நடிக்கும் அடுத்த படத்திலும்  ப்ரியா பவானிசங்கர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார், ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகவிருக்கும் திரைப்படம் ருத்ரன். இந்த படத்தின் டைட்டில் லுக் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் நாயகி பிரியா பவானி சங்கர் என்று சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது 

priya bhavanisankar

இன்று பிரியா பவானி சங்கர் பிறந்த நாளை கொண்டாடுவதை அடுத்து அவருக்கு இந்த அறிவிப்பு பிறந்தநாள் பரிசாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாகவும் சென்னை உள்பட தமிழகத்தின் பல முக்கிய பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ராகவா லாரன்ஸின் அடுத்த படத்தில் பிரியா பவானிசங்கர் இணைந்ததை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது


 

From around the web