ராகவா லாரன்ஸ் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

 

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்ஷய்குமார் நடிப்பில் உருவான ’லட்சுமி பாம்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்ததை அடுத்து இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியானது. மேலும் இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகப் போவதாக கூறப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. அட்டகாசமாக உருவாகியுள்ள இந்த மோஷன் போஸ்டரின் இறுதியில் லட்சுமிபாம்’ திரைப்படம் நவம்பர் 9ஆம் தேதி தீபாவளி அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் இந்த படம் தீபாவளியில் ஓடிடி ரிலீஸ் என்பதை ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்திலும் உறுதி செய்துள்ளார். ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ள இந்த படத்தை அக்சயகுமாரின் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

அக்ஷய்குமார், கைரா அத்வானி உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் தமிழில் வெளியான ’காஞ்சனா’ திரை படத்தின் இந்தி ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

From around the web