ரஜினி கட்சியில் இணைகிறார் ராகவா லாரன்ஸ்: அதிரடி அறிவிப்பு 

இந்த கொரோனா காலத்தில் ராகவா லாரன்ஸ் பல்வேறு உதவிகளை செய்தார் என்பதும், கோடிக்கணக்கில் தனது சொந்த பணத்தை எடுத்து நன்கொடையாக பொது மக்களுக்கும் அரசுக்கும் கொடுத்தார் என்பதும் தெரிந்ததே

 

இந்த கொரோனா காலத்தில் ராகவா லாரன்ஸ் பல்வேறு உதவிகளை செய்தார் என்பதும், கோடிக்கணக்கில் தனது சொந்த பணத்தை எடுத்து நன்கொடையாக பொது மக்களுக்கும் அரசுக்கும் கொடுத்தார் என்பதும் தெரிந்ததே

மேலும் பல ஏழை எளிய மக்கள் ராகவா லாரன்ஸுடன் சமூக வலைதளங்கள் மூலம் உதவி கேட்டதை அடுத்து அவர்களுக்கும் தன்னால் முடிந்த உதவியை ராகவா லாரன்ஸ் செய்து வந்தார்

இந்த நிலையில் தற்போது அவர் அரசியலில் இறங்கப் போவதாக அறிவித்துள்ளார். தனக்கு எதிர்மறை அரசியல் பிடிக்காது என்றும் அதனால் தான் அரசியலில் இதுவரை தாம் ஈடுபடவில்லை என்றும் அரசியலில் ஈடுபடாமல் சமூக சேவை செய்ய வேண்டும் என்பதுதான் எனது ஆசை என்றும் கூறியுள்ளார்

ஆனால் அதே நேரத்தில் தனது தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் எதிர்மறை அரசியல் இல்லாமல் நேர்மறை அரசியலில் ஈடுபட உள்ளார் என்றும் அவர் ஆன்மீக அரசியலில் குதித்தால் கண்டிப்பாக நான் அந்த கட்சியில் சேருவேன் என்றும் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார். இதனை அடுத்து சூப்பர் ஸ்டார் ஆரம்பிக்க இருக்கும் கட்சியில் ராகவா லாரன்ஸ் இணைய உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது 


 

From around the web