பிச்சை எடுத்து தன்னம்பிக்கையோடு டீ விற்கும் இளைஞருக்கு நடிகர் கொடுக்கும் ஒரு லட்ச ரூபாய்!

வட இந்தியாவில் ஒரு சோனு சூட் போல் தென்னிந்தியாவில் ராகவா லாரன்ஸ் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் பிச்சை எடுத்து அதில் கிடைத்த பணத்தை மிச்சப்படுத்தி இன்று தொழிலதிபராக மாறி இருக்கும் வாலிபர் ஒருவருக்கு ஒரு லட்ச ரூபாய் கொடுக்க விரும்புவதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார் மதுரை அலங்காநல்லூர் என்ற பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் வேலையில்லாமல் வருமானம் இல்லாமல் இருந்ததால் பிச்சை எடுக்கத் தொடங்கி உள்ளார். தினமும்
 
பிச்சை எடுத்து தன்னம்பிக்கையோடு டீ விற்கும் இளைஞருக்கு நடிகர் கொடுக்கும் ஒரு லட்ச ரூபாய்!

வட இந்தியாவில் ஒரு சோனு சூட் போல் தென்னிந்தியாவில் ராகவா லாரன்ஸ் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் பிச்சை எடுத்து அதில் கிடைத்த பணத்தை மிச்சப்படுத்தி இன்று தொழிலதிபராக மாறி இருக்கும் வாலிபர் ஒருவருக்கு ஒரு லட்ச ரூபாய் கொடுக்க விரும்புவதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்

மதுரை அலங்காநல்லூர் என்ற பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் வேலையில்லாமல் வருமானம் இல்லாமல் இருந்ததால் பிச்சை எடுக்கத் தொடங்கி உள்ளார். தினமும் பிச்சை எடுப்பதால் 100 முதல் 150 ரூபாய் வரை கிடைக்கும் என்றும் அதில் 50 ரூபாய் மட்டும் செலவு செய்துவிட்டு மீதி பணத்தை சேமித்து வைத்ததாகவும் அவர் வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்

சேமித்து வைத்த அந்த பணம் ரூபாய் 7000 சேர்ந்ததும் 5,000 ரூபாய்க்கு வீடு வாடகைக்கு ஒன்றை எடுத்து 2000 ரூபாய்க்கு டீ விற்பனை செய்யும் தொழில் தொடங்கியதாக தெரிவித்துள்ளார். ஒரு டீ பத்து ரூபாய் என விற்பனை செய்து அதில் கிடைக்கும் பணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வைத்துள்ள அவர், இந்த பணத்தின் மூலம் அவர் தனது உணவுத் தேவையை மட்டும் நிறைவேற்றுவது மட்டுமின்றி தினமும் 30 பேருக்கு அவர் இலவசமாக சாப்பாடு கொடுக்கிறார்

தன்னைப்போல் பசியுடன் யாரும் கஷ்டப்படக் கூடாது என்பதற்காகப் யாரும் இல்லாத அனாதைகளுக்கு சாப்பாடு சமைத்து பார்சல் கட்டி இவரே கொண்டுபோய் கொடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எதிர்காலத்தில் தனக்கு ஒரு முதியோர் இல்லம் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாகவும் அந்த ஆசையை தன்னம்பிக்கையுடன் நிறைவேற்றுவேன் என்றும் அதற்கு கடவுள் தனக்கு உறுதுணையாக இருப்பார் என்றும் கூறியுள்ளார். இந்த இளைஞரின் தன்னம்பிக்கையை பார்த்து ஆச்சரியம் அடைந்தநடிகர் இயக்குனர் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

இந்த இளைஞனின் தன்னம்பிக்கையை பார்க்கும் பொழுது வாழ்க்கையில் எப்பேர்பட்ட மனிதனுக்கும் தன்னம்பிக்கை பிறக்கும், இவருக்கு என்னால் முடிந்த உதவியாக 1 லட்சம் கொடுக்க ஆசைப்படுகிறேன்.யாரேனும் இவரது தொடர்பு கிடைத்தால் பகிரவும், நன்றி. “இறக்கத்தான் பிறந்தோம் அதுவரை இரக்கத்தோடு இருப்போம்’

From around the web