இதை செய்ய முடியுமா? ஸ்ரீரெட்டிக்கு சவால் விடுத்த ராகவா லாரன்ஸ்!

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் ராகவா லாரன்ஸ் மீது பாலியல் புகாரை கூறியிருந்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கிட்டத்தட்ட ஒருவாரத்திற்கு பின்னர் ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டுக்கு ராகவா லாரன்ஸ் பதிலளித்துள்ளார் என்பது மட்டுமின்றி ஸ்ரீரெட்டிக்கு ஒரு சவாலையும் விடுத்துள்ளார். ராகவா லாரன்ஸ் கூறியதாவது: ஸ்ரீரெட்டி கூறுவது முற்றிலும் பொய். அவர் தவறு நடந்ததாகக் குறிப்பிடும் சமயத்தில் நான் தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் ‘ரிபெல்’ திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருந்தேன். அத்திரைப்படம் வெளிவந்து கிட்டத்தட்ட
 

இதை செய்ய முடியுமா? ஸ்ரீரெட்டிக்கு சவால் விடுத்த ராகவா லாரன்ஸ்!

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் ராகவா லாரன்ஸ் மீது பாலியல் புகாரை கூறியிருந்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கிட்டத்தட்ட ஒருவாரத்திற்கு பின்னர் ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டுக்கு ராகவா லாரன்ஸ் பதிலளித்துள்ளார் என்பது மட்டுமின்றி ஸ்ரீரெட்டிக்கு ஒரு சவாலையும் விடுத்துள்ளார். ராகவா லாரன்ஸ் கூறியதாவது:

ஸ்ரீரெட்டி கூறுவது முற்றிலும் பொய். அவர் தவறு நடந்ததாகக் குறிப்பிடும் சமயத்தில் நான் தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் ‘ரிபெல்’ திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருந்தேன். அத்திரைப்படம் வெளிவந்து கிட்டத்தட்ட 7 வருடங்களாகின்றன. இத்தனை நாட்களாக புகார் அளிக்காமல் அவர் என்ன செய்து கொண்டிருந்தார்?

இதை செய்ய முடியுமா? ஸ்ரீரெட்டிக்கு சவால் விடுத்த ராகவா லாரன்ஸ்!அச்சமயத்தில் ஹோட்டல் அறை ஒன்றில் என்னைச் சந்தித்ததாகக் கூறும் ஸ்ரீரெட்டி, அந்த அறையில் நான் ராகவேந்திர சுவாமி படம் மற்றும் ருத்ராக்‌ஷம் எல்லாம் வைத்து அறையை பக்திமணம் கமழ வைத்திருந்தாதாக் கூறியுள்ளார். நான் என்ன முட்டாளா? ஹோட்டலில் படுக்கை அறையில் ராகவேந்திர சுவாமி படத்தை வைக்க?!

அவ்வளவு ஏன்? எனக்கு ஸ்ரீரெட்டியைப் பார்த்தால் இப்போதும் கோபம் வரவில்லை. அவரது நேர்காணல்களைக் காணும்போது அவரது நிலையை எண்ணி வருத்தமாகத் தான் இருக்கிறது. இப்போதும் ஒன்றும் கெட்டு விடவில்லை. நான் பத்திரிகையாளர்களைக் கூட்டுகிறேன். ஸ்ரீரெட்டி அங்கே வந்து நான் சொல்லும் காட்சிக்கு நடித்துக் காட்டி தனது நடிப்புத் திறனை நிரூபிக்கட்டும். சில நடன அசைவுகளைக் கற்றுத் தருகிறேன். அதன்படி ஆடிக் காட்டி நிரூபிக்கட்டும். சோதிக்கிறேன் என்று நான் கடினமான நடன அசைவுகளை செய்து காட்டச் சொல்வேன் என்ற பயமெல்லாம் வேண்டாம். மிக எளிதான நடன அசைவுகளைச் செய்து காட்டினால் போதும். அவர் தனது திறமையை நிரூபிக்க வேண்டும். அது தான் முக்கியம். ஒருவேளை செய்தியாளர்கள் முன்னிலையில் நடித்துக்காட்ட சிரமமாக இருந்தால் ஸ்ரீரெட்டி அவரது வழக்கறிஞர்களை அழைத்து வந்து அவர்கள் முன்னிலையில் நான் வைக்கும் சோதனையில் ஜெயித்து தனது நடிப்பு மற்றும் நடனத் திறமையை நிரூபித்தால் எனது அடுத்த திரைப்படத்தில் அவருக்கு வாய்ப்பு வழங்க நான் தயார்.

இதை அவர் மீதான பயத்தில் நான் அறிவிக்கவில்லை. எனக்கு உண்மையிலேயே பெண்கள் மீதுள்ள மரியாதையால் சொல்கிறேன். இல்லாவிட்டால் என் அம்மாவுக்காக நான் கோயில் கட்டினேன் என்ற பெருமையை இழந்தவனாகி விடுவேன்.’

இவ்வாறு ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார். அவரது இந்த சவாலை ஸ்ரீரெட்டி ஏற்பாரா? என்பதை பொறுத்ஹிருந்து பார்ப்போம்

From around the web