விரைவில் ராட்சசன் இரண்டாம் பாகம்: நடிகர் விஷ்ணு விஷால் தகவல்

கடந்த 2018ஆம் ஆண்டு வெளிவந்த ’ராட்சசன்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் அந்த திரைப்படம் விஷ்ணு விஷாலின் மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்தியது என்பதும் குறிப்பிடத்தக்கதுஇந்த படமும் சூப்பர் ஹிட்டாகி திரையரங்கு உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் வசூலை வாரி குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை விஷ்ணுவிஷால் தயாரிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கடந்த சில மாதங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனையடுத்து
 

விரைவில் ராட்சசன் இரண்டாம் பாகம்: நடிகர் விஷ்ணு விஷால் தகவல்

கடந்த 2018ஆம் ஆண்டு வெளிவந்த ’ராட்சசன்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் அந்த திரைப்படம் விஷ்ணு விஷாலின் மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த படமும் சூப்பர் ஹிட்டாகி திரையரங்கு உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் வசூலை வாரி குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை விஷ்ணுவிஷால் தயாரிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கடந்த சில மாதங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனையடுத்து தற்போது அவர் இது குறித்த தகவலை தெரிவித்துள்ளார்

ஐ.எம்.டி.பி தளத்தில் அதிக புள்ளிகளைப்பெற்று ’ராட்சசன்’ திரைப்படம் முதலிடத்தில் உள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்த நடிகர் விஷால், ராட்சசன் படத்தின் இரண்டாம் பாகம் மிக விரைவில் உருவாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்

இதற்கான கதையை முதல் பாகத்தை இயக்கிய ராம் குமார் உருவாக்கி வருவதாகவும் கிட்டத்தட்ட திரைக்கதை முடிவடையும் தருவாயில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே ’ராட்சசன் 2’ படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்றும், இந்த படத்திலும் விஷ்ணுவிஷால் அமலாபால் இணைந்து நடிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது

From around the web