அருண் விஜய் படத்தில் நடிக்கும் குக் வித் கோமாளி பிரபலம்!!!

குக் வித் கோமாளி புகழ் இந்த படத்தில் இணைந்துள்ளார். இந்த செய்தியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. வரவர பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ரசிகர் பட்டாளம் இந்த நிகழ்ச்சிக்கும் உருவாகியுள்ளது. 

போட்டியாளர்களுக்கும் சரி, கோமாளிகளுக்கும் சரி தனித்தனியே ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்றே சொல்லலாம். போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமைக்க படாதபாடு படும் காட்சிகள் ரசிகர்களை குலுங்கி, குலுங்கி சிரிக்க வைக்கிறது. 

அதிலும் முக்கியமாக புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை என கடந்த சீசனில் இருந்த கோமாளிகள் இந்த சீசனிலும் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ஷோவிற்காக ரசிகர்கள் காத்திருந்து பார்க்கும் அளவிற்கு மிகப்பெரிய ரீச் அடைந்துள்ளது.

இந்நிலையில் அருண் விஜய் நடித்து வரும் படங்களில் ஒன்று, அவரது மைத்துனர் ஹரி இயக்கம் பெயரிடப்படாத படம். அருண் விஜய் விஜய்க்கு  அக்னி சிரகுகலள், பாக்ஸர், சினம் என பல படங்கள் அவர் கைவசம் இருக்கிறது. 

அதேபோல் சாமி படத்தை இயக்கிய ஹரி, சாமி ஸ்கொயர் படத்தை சமீபத்தில் இயக்கியிருந்தார். விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தப் படம் அருண் விஜய்யின் 33-வது படமாகவும், ஹரியின் 16-வது படமாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.கதாநாயகியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்கிறார். 

ப்ரியா பவானி சங்கர், அருண் விஜய் இருவரும் மாபியா: அத்தியாயம் 1 படத்தில் கார்த்திநரேன் இயக்கத்தில் ஒன்றாக நடித்திருந்தனர். தற்போது குக் வித் கோமாளி புகழ் இந்த படத்தில் இணைந்துள்ளார். இந்த செய்தியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

From around the web