குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறிய புரட்சி மணி

மக்களிடம் இருந்து குறைந்த வாக்குகள் பெற்று புரட்சி மணி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளார்.

 
குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறிய புரட்சி மணி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர்.

இதில் தற்போது கடந்த 7 சீசன்களின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் சிங்கர் சீசன் 8 நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் 20 திறமையான போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் கடந்த சில வாரங்களில் 5 போட்டியாளர்கள் மக்களிடம் இருந்து குறைந்த வாக்குகள் பெற்று நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளனர்.

அதே போல் சென்ற வாரமும் புரட்சி மணி மற்றும் அரவிந்த் என இரு போட்டியாளர்களின் பெயர் வெளியேற்ற படும் நபர்களின் பட்டியலில் இடம்பெற்றது. இந்நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பான எபிசோடில் மக்களிடம் இருந்து குறைந்த வாக்குகள் பெற்று புரட்சி மணி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளார்.

From around the web