பிரபல கோமாளி' பற்றி புகழ் உருக்கம்! யார் தெரியுமா?

விஜய் டிவி நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசன் பெரும் வரவேற்பை பெற்றது
 
பிரபல கோமாளி' பற்றி புகழ் உருக்கம்! யார் தெரியுமா?

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2வது சீசன் தொடர்ந்து ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சிக்கு முந்தைய நிகழ்ச்சியை விட ரசிகர்கள் பட்டாளம் இந்நிகழ்ச்சிக்கு அதிகமாகினர். குறிப்பாக இந்த நிகழ்ச்சியின் கோமாளிகளாக புகழ், சிவாங்கி, பாலா, சரத் உள்ளிட்டோர் மிகவும் புகழ் பெற்றனர்.

இதேபோல் அஷ்வின், கனி, ஷகிலா, பவித்ரா, பாபா பாஸ்கர் உள்ளிட்டோர் பைனலுக்கு வந்தனர். இதில் தமிழ் புத்தாண்டை ஒட்டி ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே எபிசோடில் நடிகர் சிம்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் காரக்குழம்பு கனி டைட்டில் வென்றார். இரண்டாவதாக ஷகிலாவும் மூன்றாவதாக அஷ்வினும் வென்றனர்.

இதனிடையே கோமாளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் விதமாக அவர்களுக்கும் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. அப்போது சரத்துக்கு உழைப்பாளி என்கிற அங்கீகாரம் வழங்கப்பட்டது. அப்போது நெகிழ்ச்சில் அழுத சரத், இந்த அங்கீகாரம் தனக்கு மேலும் ஊக்கத்தை தருவதாகவும், “இன்னும் நிறைய செய்வேன்” என்றும் அழுது கொண்டே கூறினார்.

அப்போது அவருடன் சேர்ந்து எமோஷனலான புகழ், “சரத் எப்போதுமே அவரையே தாழ்த்தி அவரையே கலாய்த்து ஒரு கவுண்டர் போடச் சொல்லி எங்களிடம் சொல்லுவார். இப்படி தன்னை தாழ்த்திக் கொள்பவர்கள் எப்போதுமே உயர்வார்கள்!” என்று புகழ் இன்னும் எமோஷனலாக அழுதபடி கூறினார். 

From around the web