சிம்பிளாக பைக்கில் வந்து ஓட்டு போட்ட புகழ்... வரவேற்பு கொடுத்த மக்கள்!!!

புகழ் ஓட்டு போடுவதற்காக பைக்கில் வாக்குச்சாவடிக்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
 

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடந்த நிலையில், மக்கள் ஓட்டுச் சாவடிகளில் தங்களது வாக்குகளை பதிவு செய்து, தங்கள் ஜனநாயக கடமையை  நிறைவேற்றினர். 

பிரபலங்களும் இதற்கு விதிவிலக்கல்ல, நமது கோலிவுட் பிரபலங்கள் பலர் காலையில் இருந்தே வாக்களிக்கத் தொடங்கிவிட்டனர். கோலிவுட் டின் முன்னணி நடிகர்களான அஜித், ஷாலினி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன், அக் ஷரா ஹாசன், சூர்யா, கார்த்தி, சிவகுமார், சிவகார்த்திகேயன், விஜய் என கோலிவுட் திரையுலகின் நட்சத்திரங்கள் பலரும் வாக்களித்தனர்.

அந்த வகையில் சின்னத்திரை பிரபலங்களான குக் வித் கோமாளி அஸ்வின், டிடி, அஞ்சனா, செஃப் தாமு போன்றோர் தங்களது ஓட்டுகளை பதிவு செய்துள்ளனர். அதேபோல் குக் வித் கோமாளி புகழ் பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. ஆரம்ப காலகட்டத்தில் பல கஷ்டங்களை அனுபவித்து எல்லாவகையான வேலைகளையும் செய்து இன்று நல்ல நிலைமைக்கு வந்துள்ளார். சமீபத்தில் விலை உயர்ந்த கார் ஒன்றையும் வாங்கியுள்ளார். எனினும் பழைய நிலைமையை மறக்காது இன்றும் தாழ்மையுடன் ரசிகர்களோடு அவர் உறவாடும் விதம் பலரையும் ஈர்த்துள்ளது.

புகழ் ஓட்டு போடுவதற்காக பைக்கில் வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார். அப்பொழுது அவரைப் பார்த்த ரசிகர்கள் அவரை வேகமாக பின்தொடர்ந்தனர். இந்நிலையில்  தளபதி விஜய் சைக்கிளில் ஓட்டு போட சென்ற போது ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்த வீடியோக்கள் தான் நாள் முழுவதும் வைரலானது. தளபதி விஜய் போன்றே புகழுக்கு ரசிகர்கள் கொடுத்திருக்கும் இந்த இன்ப அதிர்ச்சி வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

From around the web